ரம்யா கிருஷ்ணன் இதுவரை தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்டார் . இவர்களுக்கு ரித்விக் வம்சி என்கிற மகன் உள்ளார்.