முதலிடத்தில் கேஜிஎப் உள்ளது. தென்னக சூப்பர் ஸ்டார் யாஷின் கேஜிஎப் கடந்த ஏப்ரலில் 14-ம் தேதி வெளியானது. வார இறுதிகள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இந்த படம் முதலிடத்தை பிடித்துள்ளது. வர இறுதியில் கேஜிஎப் ரூ.193.99 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை.
26
sultan
சல்மான்கானின் சுல்தான் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த படம் ஜூலை 2016 இல் வெளியானது. வர இறுதியில் சுல்தான் ரூ.180.36 கோடி வசூலித்துள்ளது.
கிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள வார் திரைப்படம் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் வார இறுதியில் ரூபாய் 166.25 கோடி வசூலை குவித்தது. படம் கடந்து 2019 அக்டோபர் மாதத்தில் வெளியானது.
சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள பாரத் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று வார இறுதி வசூல் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த படம் 2019 ஜூன் மாதம் வெளியானது. அப்போது வார இறுதியில் ரூபாய் 150.10 கோடி வசூல் செய்தது.
சல்மான்கான் மற்றும் சோனம் கபூர் நடித்த பிரேம் ரத்தன் தன் பாவ் படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வார இறுதியில் இந்த படம் 129.77 வசூலை பெற்றது. 2015 நவம்பர் மாதம் இந்த படம் வெளியிடப்பட்டது.
66
bahubali 2
இந்த பட்டியலில் மிகப்பெரிய சாதனை படங்களாக கருதப்படும் பாகுபலியோ, ஆர்ஆர்ஆர் படங்களோ இடம்பெறவில்லை அதேபோல பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார் ஆகியோரின் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.