ரூ.3 கோடி மதிப்பில் புதிய சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை.. வைரல் போட்டோஸ்

Published : Sep 14, 2023, 12:31 PM IST

நடிகை ரகுல் ப்ரீத் சிங் Mercedes-Benz Maybach GLS சொகுசு ஆடம்பர காரை வாங்கி உள்ளார்.

PREV
15
ரூ.3 கோடி மதிப்பில் புதிய சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை.. வைரல் போட்டோஸ்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பீர்த் சிங். இதன் மூலம் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

 

25

இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் Mercedes-Benz Maybach GLS ஆடம்பர சொகுசு காரை வாங்கி உள்ளார். தனது புதிய காருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைர்லாகி வருகின்றன. ரகுல் வாங்கிய புதிய மெர்சிடஸ் காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடியாகும்.

 

வயசு ஆக ஆக அழகும் அதிகமாயிட்டே போகுதே.. என்றும் இளமையுடன் வலம் வரும் நடிகைகள்..!

35

மெர்சிடர்ஸ் பென் மேபக் காரை வாங்கிய முதல் பிரபலம் ரகுல் ப்ரீத் சிங் இல்லை. ஏற்கனவே பல நடிகர், நடிகைகள் இந்த காரை வாங்கி உள்ளனர். குறிப்பாக பல பாலிவுட் பிரபலங்கள் இந்த சொகுசு ஆடம்பர காரை வாங்கி உள்ளனர்.

45

மேபேக் ஜிஎல்எஸ்600 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் முதல் மேபேக் எஸ்யூவி ஆகும். இந்த காரின் முதல் பேட்ச் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டது. தற்போது, சந்தையில் உள்ள பிராண்டின் மிகவும் விலையுயர்ந்த முதன்மை கார் இதுவாகும்.

55

இந்த மெர்சிடஸ் சொகுசு காரில் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், பின் இருக்கை பொழுதுபோக்கு தொகுப்பு, சிறிய குளிர்சாதன பெட்டி, பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட உயர்மட்ட பிரீமியம் அம்சங்கள் உள்ளன.  எஸ்யூவியின் விலையானது, உரிமையாளர்களின் விருப்பங்களின் அடிப்படையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories