திரைத்துறையில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்பதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுவார்கள். குறிப்பாக திருமணமாகும் வரை தான் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்கும். ஆனால் தற்போது வயதான பிறகும் பல நடிகைகள் தங்கள் வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். திருமணமான நடிகைகளும் சிலர் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட 7 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நதியா : 80களில் மலையாள படத்தின் திரையுலகில் அறிமுகமான நதியா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தார். குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்த நடிகைகள் நதியாவும் ஒருவர். துளி கூட கவர்ச்சியில்லாம. தனது நடிப்பின் மூலம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்த அவர் திருமணமான பின் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். பின்னர் 2004-ல் எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி மூலம் கம்பேக் கொடுத்த அவர் தொடர்ந்து துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் தொடங்கி ஹரிஷ் கல்யான் வரை பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். தற்போது 57 வயதாகும் நதியா, தனது வசீகரத்தால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன் : தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். மோசமான நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படையப்பா நீலாம்பரி, பாகுபலி ராஜமாதா வரை இவரின் நடிப்பு திறமை தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெயிலரில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், தற்போது 52 வயதிலும், பஞ்ச தந்திரம் படத்தில் வரும் மேகியை போலவே என்றென்றும் இளமையுடன் இருக்கிறார்.
jothika
ஜோதிகா : 2000களில் உச்சத்தில் இருந்த நடிகை ஜோதிகா தனது நடிப்பு திறமையால் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துவர். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த ஜோதிகா பின்னர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர். பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் 45 வயதிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சினேகா : 2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஸ்னேகா. விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், விக்ரம் என அப்போது உச்சத்தில் இருந்த பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்னேகா, நடிகர் பிரச்சன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொதும் தமிழ், மலையாளம் மொழி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 42 வயதிலும் டிவி ஷோ, விளம்பரம் என பிசியாக இருக்கிறார்.
Manju warrior
மஞ்சு வாரியர் : மலையாளத்தில் உச்ச நடிகையாக வலம் வந்த நடிகை மஞ்சு வாரியர் தமிழிலும் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை, கிளாசிக்கல் டான்சர், பின்னணி பாடகி என பன்முக திறமைகளை கொண்டவர். 1998-ல் மஞ்சு வாரியரும் நடிகர் திலீப்பும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2015-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது 45 வயதாகும் மஞ்சு வாரியர் தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
Trisha Krishna
த்ரிஷா : 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடிக்கும் ஒரே நடிகை என்றால் அது த்ரிஷா தான். 2000-களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். தென்ந்தியாவின் ராணி என்று அழைக்கப்படும் த்ரிஷா, மௌனம் பேசியதே தொடங்கி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை ஹீயோனாக கலக்கியவர். மேலும் லியோ, விடாமுயற்சி என விஜய், அஜித்துடன் நடிக்க கமிட்டாகி உள்ளார். 40 வயதாகும் த்ரிஷாவை தற்போது தன் இளமையை தக்க வைத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
நயன்தாரா : 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிசியாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 39 வயதாகும் அவர் தனது அழகாலும், இளமையாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.