விரைவில் ரகுல் பிரீத் சிங்கிற்கு டும்.. டும்.. டும்.! அட அவரும் ஒரு பிரபலமா..? சகோதரர் வெளியிட்ட சூப்பர் தகவல்

Published : Oct 13, 2022, 09:40 PM IST

நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அறிவிக்கும் விதமாக, அவரின் சகோதரர் ரகுல் திருமணம் செய்துகொள்ள உள்ள நபர் குறித்த தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

PREV
16
விரைவில் ரகுல் பிரீத் சிங்கிற்கு டும்.. டும்.. டும்.! அட அவரும் ஒரு பிரபலமா..? சகோதரர் வெளியிட்ட சூப்பர் தகவல்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
 

26

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர் அருண் விஜய் நடித்த 'தடையற தாக்கு', படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'என்னமோ ஏதோ' திரைப்படமும் படு தோல்வியை சந்தித்தது. எனவே தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், தமிழ் படத்தின் வாய்ப்புகளும், குவிய துவங்கியது.

மேலும் செய்திகள்:  Mysskin: இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !
 

36

கார்த்திக்கு ஜோடியாக இவர் கம் பேக் கொடுத்த,  'தீரம் அதிகாரம் ஒன்று' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  எனவே இந்த படத்தை தொடர்ந்து, தேவ், NGK போன்ற படங்களில் நடித்தார். தற்போது, கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
 

46

ஹிந்தி மொழியில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் 32 வயதை எட்டி விட்ட நிலையில், விரைவில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதை அறிவிக்கும் விதமாக, ரகுல் திருமணம் செய்து கொள்ள உள்ள பிரபலம் குறித்த தகவலை தற்போது அவரது சகோதரர் வெளியிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்:  தளபதி தந்தைக்கு இந்த நிலையிலா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!
 

56

ஏற்கனவே ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில்,  இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கூறியபோது... ’எந்த ஒரு இனிமையான காதல் உறவும் திருமணம் தான் முடிவு என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' . அனேகமாக ரகுல் ப்ரீத்தி சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என வெளிப்படையாகவே கூறியுள்ளார். 
 

66

எனவே ரகுல் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்களும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: keerthy suresh : பலவண்ண ஆடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ..நியூ லுக் இதோ
 

click me!

Recommended Stories