keerthy suresh : பலவண்ண ஆடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ..நியூ லுக் இதோ

First Published | Oct 13, 2022, 7:33 PM IST

 தற்போது பலவண்ண ங்கள் நிறைந்த சட்டை மற்றும் பேன்ட் அணிந்து கேசுவல் லுக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh

குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமாகியிருந்த கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் வெற்றி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். 

keerthy suresh

குழந்தை நட்சத்திரமாக பல விருதுகளையும் தட்டி தூக்கியுள்ளார். இவரது தந்தை பிரபல தயாரிப்பாளரும் கூட. இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் செய்திகளுக்கு...Nazriya Nazim Fahadh : கணவருடன் கண்கவரும் நஸ்ரியா நசீம்..க்யூட் போட்டோஸ் இதோ

Tap to resize

keerthy suresh

ஆனால் இந்த படம் சரியான ஓபனிங்கை கொடுக்கவில்லை. இதையடுத்து ரஜினிமுருகனில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார். 

keerthy suresh

தொடர்ந்து  தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, சண்டைக்கோழி 2 என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இங்கு டாப் டென் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

keerthy suresh

அதிலும் மகாநதி படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த இவர் தேசிய விருதையும் கைப்பற்றினார். இதன் மூலம் முன்னணி நடிகைகளின் முதல் வரிசையில் அமர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh

பின்னர் தனக்கேற்ற கதைகளை தேடி வருகிறார். அதன்படி வெளியான படங்கள் தான் பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி போன்றவை. ஆனால் இந்த பாணி இவருக்கு சரியாக கைகொடுக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு..நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை அபிநவ்யா

இதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். முன்னதாக அண்ணாத்தை படத்தில் ரஜினிக்கு தங்கையாக தங்க மீனாட்சி வேடத்தில் நடித்து பாசமழையை பொழிந்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில்  தற்போது பலவண்ண ங்கள் நிறைந்த சட்டை மற்றும் பேன்ட் அணிந்து கேசுவல் லுக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Latest Videos

click me!