தமிழ் சினிமாவில் 90'ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சினேகா. குறிப்பாக கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் அவரின் பட்டமான... புன்னகை அரசி பட்டம் இவருக்கு தான் கிடைத்தது. தன்னுடைய பளீச் சிரிப்பால் பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சினேகா நேற்று தன்னுடைய 41ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
26
மிகவும் அமைதியான இடத்தில்... காட்டுக்குள் அமைந்துள்ள டென்ட் ஹவுசில் தான் இவரது பிறந்தநாள் பொழுது விடிந்தது. தூங்கி எழுந்த முகத்துடன், கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்தது.
இவரது பிறந்தநாள் செலிபிரேஷன் புகைப்படங்கள் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, செம்ம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
46
இந்த பிறந்தநாளை, கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள சினேகா... தாமரை குளத்தின் பக்கத்தில் அமர்ந்து புன்னகையை பூவாய் உதிர்த்து அழகு தேவதை போல் மிளிர்கிறார்.
41 வயதில்... இரண்டு குழந்தைகளுக்கு தாய்யான பின்பும் கூட... சினேகாவின் அழகு நாளுக்கு நாள் கூடி கொண்டே தான் செல்கிறது. இதற்க்கு இந்த புகைப்படங்களே சாட்சி.
66
கணவருடன் ரொமான்ஸ்... செல்ல குழந்தைகளின் பாச மழை என, ஆனந்தமாக நகர்ந்துள்ளது இவரது பிறந்தநாள். மேலும் ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ள இவர், விரைவில் மற்ற சில புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.