mrunal thakur : குழப்பம் வரும் போது புடவையை தேர்வு செய்கிறேன்... சீதா ராமம் நாயகி

Published : Oct 13, 2022, 05:11 PM ISTUpdated : Oct 13, 2022, 08:27 PM IST

சிவப்பு வண்ண பூக்கள் வடிவமைக்கப்பட்ட உடையில் தேவதை போல மிளிர்ந்திருந்தார் மிருணாள் தாக்கூர்.

PREV
16
mrunal thakur : குழப்பம் வரும் போது புடவையை தேர்வு செய்கிறேன்...  சீதா ராமம் நாயகி
Mrunal Thakur

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீதாராமன் படத்தில் நாயகியாக நடித்தவர் தான் மிருணாள் தாக்கூர். அந்த படத்தில் தலையத்தலைய  சேலை கட்டி அவர் வந்து ரசிகர்களின் மனதை நீங்கா இடம் பிடித்தார்.

26
Mrunal Thakur

இந்த படத்தில் இவருக்கு அதிக பாராட்டுகளும் கிடைத்திருந்தது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் வெளியாகிய இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர்.

மேலும் செய்திகளுக்கு...நகைக்கடை விழாவில் குழுமிய நட்சத்திரங்கள்..பிரியா வாரியார் வெளியிட்ட போட்டோஸ் இதோ

36
Mrunal Thakur

20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் அவரிடம் சேர்ப்பது தான் இந்த படத்தின் முக்கிய கதையாக இருந்தது. இந்த படத்திற்குப் பிறகுமிருணாள் தாக்கூர் குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது. 

46
Mrunal Thakur

அந்த வகையில் தற்போது இவர் கலந்து கொண்ட பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சி குறித்தான புகைப்படமும் வைரலாகி வருகிறது. மும்பையில் நடைபெற்ற இந்த விழாவில் மிருணாள் தாக்கூர் மற்றும் டயானா பெண்டி ஆகியோர் அலங்கார உடையில் தோன்றியிருந்தனர். 

56
Mrunal Thakur

சிவப்பு வண்ண பூக்கள் வடிவமைக்கப்பட்ட உடையில் தேவதை போல மிளிர்ந்திருந்தார் மிருணாள் தாக்கூர். லேக்மி  பிராண்டின் தூதுவர் என்பதால் சிவப்பு வண்ண உடை மற்றும் பச்சை கல் பதித்த நெக்லஸ் அதற்கேற்ற கமல் என வசீகரிக்கும் அழகில் தோன்றியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..எலிமினேஷன்னா என்னது ? டீமை கதறவிடும் ஜிபி முத்து...

நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த மிருணாள் தாக்கூர் உங்கள் அன்பால் இது சாத்தியமானது. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும் நான் இந்திய உடை அணிவதை பெரிதும் விரும்புகிறேன். சில நேரம் எந்த உடை போடுவது என்பதில் குழப்பம் வரும் நேரத்தில் இந்திய பாரம்பரிய உடையான புடவையை தேர்வு செய்வேன் எனக் கூறியுள்ளார்.

66
Mrunal Thakur

மேலும் இன்ஸ்டாகிராமில் யாரை பாலோ செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பூக்கள், பூனைகள், நாய்கள் போன்றவையை மட்டுமே நான் பின்தொடர்கிறேன் யாரையும் குறிப்பிட்டு பின் தொடர்வதில்லை என பளிச்  பதில் அளித்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

click me!

Recommended Stories