தெலுங்கு திரையுலகில், தன்னுடைய 17 வயதிலேயே ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள அனிகா... சமீப காலமாக முன்னணி நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் கேரளத்தை சேர்ந்த பைங்கிளி என்றாலும், இவரை மிகவும் பிரபலமடைய செய்தது தமிழ் திரையுலகம் என்றாலும், அம்மணி ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமாகியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே... விதவிதமான உடை அணிந்து போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக வைத்திருந்த, அனிகா ஹீரோயினாக மாறிவிட்டால் சொல்லவா வேண்டும்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகள் வேற லெவலுக்கு குவிந்து வருகிறது. மேலும் அனிகா 'வாசுவின் காதலிகள்' என்கிற படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.