படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு நேர்ந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்..!

First Published | Oct 13, 2022, 3:01 PM IST

Actor Arun Vijay injured in knee  நடிகர் அருண் விஜய், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் சண்டை பயிற்சியின் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்துள்ள தகவலை, தற்போது புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

arun vijay Tamilrockerz Official Trailer

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்து இவர் நடிப்பில் வெளியான 'யானை', 'சினம்' போன்ற படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து விரைவில் இவர் நடித்துள்ள 'பார்டர்' திரைப்படத்தின் வெளியாக உள்ளது. மிகவும் பரபரப்பான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அருண் விஜய்,  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பற்றி எரியும் இரட்டை குழந்தை விவகாரம்..? மௌனம் களைத்த விக்னேஷ் சிவன் சூசகமாக பதிவிட்ட பளீச் பதில்!
 

Tap to resize

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கியது. இதுகுறித்த புரோமோ ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்து அறிவித்திருந்தது படக்குழு. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த படத்திற்கான சண்டை பயிற்சியில் அருண் விஜய் ஈடுபட்டபோது, அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த காயத்துடன் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் 100% சதவீதம் குணமடைந்து மீண்டும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேற போவது இவரா..?
 

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அருண் விஜய்யின் ரசிகர்கள் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!