அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசிலும் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியாகி 5 மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.