தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கிறது கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 350 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் சக்கைப்போடு போட்டு வருகின்றன. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
24
கூலி பட நடிகர்களின் சம்பளம்
கூலி திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதால் இதில் பிற மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தில் சைமன் என்கிற கேரக்டரில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதில் சில நிமிட கேமியோ ரோலில் தாஹா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் அமீர்கான் எந்தவித சம்பளமும் வாங்காமல் நடித்திருக்கிறார். ரஜினிக்காக இப்படத்தில் நடித்ததாக அமீர்கானே ஆடியோ லாஞ்சில் கூறி இருக்கிறார். இதில் காளீசா என்கிற கேரக்டரில் நடித்துள்ள உபேந்திராவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.
34
ரஜினி சம்பளம் எவ்வளவு?
கூலி படத்தில் தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரூ.150 கோடி சம்பளம் மட்டுமின்றி படத்தின் லாபத்தில் இருந்து பங்கும் பெற இருக்கிறார். அதன் வாயிலாகவும் ரஜினிக்கு 100 கோடிக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் இப்படத்தில் தயாள் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் மலையாள நடிகர் செளபின் சாஹிருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பனாக நடித்துள்ள நடிகர் சத்யராஜுக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு இப்படத்திற்காக ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். தமிழ் படத்திற்காக ஒரு இயக்குனர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். மேலும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மட்டும் ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படி சம்பளத்தை வாரி வழங்கி எடுக்கப்பட்டுள்ள கூலி திரைப்படம் எந்த அளவு வசூலை வாரிக்குவிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.