Bhagyashri Borse :காந்தா மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்கும் அழகு குட்டி செல்லம் பாக்யஸ்ரீ போர்ஸ்!

Published : Aug 10, 2025, 08:29 PM ISTUpdated : Aug 10, 2025, 08:33 PM IST

Bhagyashri Borse who debut with Kaantha in Tamil : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படம் மூலமாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

PREV
15
காந்தா மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்கும் அழகு குட்டி செல்லம் பாக்யஸ்ரீ போர்ஸ்!

Bhagyashri Borse who debut with Kaantha in Tamil : இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, விமர்சகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

25
துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ்

அதோடு மட்டுமின்றி இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட சமூக மாற்றத்தின் அடிப்படையிலான கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜானு சாந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

35
பாக்யஸ்ரீ போர்ஸின் முதல் தமிழ் படம்

கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் 1950 ஆம் ஆண்டு கால கட்டத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

45
காந்தா படம் மூலமாக தமிழில் எண்ட்ரி கொடுக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ்

காலத்துக்கேற்ற உடல் மொழி, உணர்ச்சி பூர்வமான உரையாடல் இவற்றை கட்டுப்பாட்டுடனும் ஆழத்துடனும் வெளிப்படுத்தி, தனது முழு திறமையை வெளிக்காட்டியுள்ளார். படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாரம்பரிய தோற்றம், ஏற்கனவே பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

55
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவது குறித்து பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவது என் வாழ்க்கையில் மிக சிறப்பான தருணம். இந்தப் படத்தில் நாங்கள் உணர்ந்த அந்த அழகான தருணங்களை ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories