இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் காந்தா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட சமூக மாற்றத்தின் அடிப்படையிலான கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜானு சாந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர்.
24
காந்தா படத்தின் முதல் சிங்கிள் டிராக்
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் டிராக் பனிமலரே பாடல் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர்.
34
துல்கர் சல்மான் காந்தா ஃபர்ஸ்ட் சிங்கிள்
'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர்.
44
பனிமலரே பாடல் லிரிக் வீடியோ
இந்தப் பாடலுக்கு பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்கா ஆகியோர் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர். இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். ரொமான்ஸ், பாஸ் கிதார், வயலின் என இந்தப் பாடலின் ரிதம் சரியான வகையில் அமைந்துள்ளது. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.