Ethirneechal: ரசிகர்களே மனச தேத்திக்கோங்க.! மரணத்தை தழுவிய ஈஸ்வரி? எதிர்நீச்சல் அடுத்த வார அப்டேட்

Published : Aug 10, 2025, 01:55 PM IST

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த வாரம் ஈஸ்வரி கதாபாத்திரம் மரணம் அடைவது போல காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். 

PREV
15
எதிர்நீச்சலில் அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன?

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் மருமகள்களாக வரும் நான்கு பெண்கள் எவ்வாறு அந்த ஆண்களை எதிர்த்து போராடி தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டது. இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் அவர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் இந்த சீரியலில் மிகப்பெரிய சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் பாகத்தை பாதியிலேயே முடித்துவிட்டு இரண்டாவது பாகத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டார்.

25
ஈஸ்வரி - குணசேகரன் மோதல்

அதன்படி சில மாதங்களுக்கு முன்பு முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் வைத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ஹீரோயினாக நடித்து வந்த மதுமிதா விலகி விட, அவருக்குப பதிலாக பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரும்பாலும் மற்ற நடிகர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் வந்த கரிகாலன் ஆதிரை திருமணத்தைப் போலவே, இரண்டாவது பாகத்திலும் விறுவிறுப்பை கூட்டுவதற்காக தர்ஷன் அன்புக்கரசி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தர்ஷன் பார்கவியை விரும்புவதால் அவரை திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார். இப்படியாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் சண்டை முற்றி, குணசேகரன் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கீழே தள்ளி விடுகிறார்.

35
சீரியலை விட்டு விலகிய கனிகா

இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஈஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இந்த நிலையில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை கனிகா இன்னமும் உறுதி செய்யவில்லை. இருப்பினும் சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள தகவலின் படி அவர் எதிர்நீச்சலில் இருந்து வெளியேறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீண்டு வராத நிலையில், அடுத்த பேரதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

45
மரணத்தை தழுவும் ஈஸ்வரி

அந்த தகவலின் படி கோமா நிலையில் இருக்கும் ஈஸ்வரி இறந்துவிட்டார் என்றும், அடுத்த வாரம் ஈஸ்வரியின் இறப்பு டிராக் காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை சற்றும் எதிர்பார்க்காத ‘எதிர்நீச்சல்’ ரசிகர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். ஆணாதிக்கம் நிறைந்த ஆண்களை எதிர்த்து போராடும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே கிடைத்து வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஈஸ்வரி கதாபாத்திரம் இறப்பது போல காட்ட வேண்டாம் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலை நிறுத்தி விடுமாறும், இதைப் பார்த்தால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

55
வெறுத்துப் போன ரசிகர்கள்

எதிர்நீச்சல் என்று பெயர் வைத்துக்கொண்டு பெண்கள் தோற்பது போலவே காட்டுவதாகவும், பெண்கள் வெறும் வாய் சவடால் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எப்போதும் ஆதி குணசேகரன் மற்றும் வில்லன்களின் கையே ஓங்கி இருப்பது போல காட்டுவது மிகுந்த சோர்வை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். முதல் பாகம் அடைந்த தோல்வியை கருத்தில் கொண்டு இரண்டாவது பாகத்தை யாவது திருச்செல்வம் நன்றாக இயக்கியிருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார். குறிப்பாக ஈஸ்வரியின் மரணம் என்பது இந்த சீரியலுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories