சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த், தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நாகர்ஜுனா, செளபின் சாஹிர், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் நாடு முழுவதும் தொடங்கி படு ஜோராக நடைபெற்று வருகிறது.
24
கூலி டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை கேரளாவில் தொடங்கியது. அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் தமிழ்நாட்டில் இப்படத்திற்கான புக்கிங் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் விறுவிறுவென ஒவ்வொரு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டில் கூலி படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்பட உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கே கேரளா மற்றும் கர்நாடகாவில் கூலி படத்தின் பர்ஸ்ட் ஷோ திரையிடப்பட இருப்பதால், அங்கு சென்று படத்தை பார்க்கவும் ரஜினி ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கும் டிக்கெட் புக்கிங் படு ஜோராக நடைபெறுகிறது.
34
கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்த கூலி
பெங்களூருவில் கூலி படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 37 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கின்றன. அதுவும் வெறும் 66 ஷோக்களில் இவ்வளவு டிக்கெட் விற்பனையாகி இருக்கிறது. இதன்மூலம் கேஜிஎஃப் 2 பட சாதனையை கூலி முறியடித்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியபோது, 10 ஆயிரம் டிக்கெட் விற்பனையாக 45 நிமிடங்கள் ஆனது. அதுவும் ஷோக்களின் எண்ணிக்கை 80 ஆக இருந்தது. அதனை தற்போது கூலி படம் முறியடித்திருக்கிறது. இதற்கு முன்னர் பெங்களூருவில் அதிவேகமாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்த படம் என்கிற சாதனையை லியோ படைத்திருந்தது. அப்படம் 50 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்த நிலையில், அதையும் கூலி முறியடித்திருக்கிறது.
கூலி தமிழ் படமாக இருந்தாலும் அதற்கு பெங்களூருவில் இவ்வளவு மவுசு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணம் இருக்கிறது. அதில் ஒன்று, இப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். மற்றொன்று, ரஜினிகாந்தின் சொந்த ஊர் பெங்களூரு தான். அங்கு தான் அவர் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்தார். இதனால் அவரது படங்களுக்கு எப்போதுமே அங்கு மவுசு இருக்கும். அதனால் கூலி படம் கர்நாடகாவிலும் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படம் கர்நாடகாவில் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.