சிவனாண்டி, சந்திரகலாவை டம்மியாக்கி புதிய வில்லியை கொண்டு வந்த ஜீ தமிழ் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Aug 08, 2025, 11:38 PM ISTUpdated : Aug 08, 2025, 11:39 PM IST

கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் சந்திரலேகா இருவரும் டம்மியான நிலையில் வில்லி ரோலுக்காக புதிய வரவாக ஃபாத்திமா பாபுவை ஜீ தமிழ் களமிறக்கியுள்ளது.

PREV
14
சந்திரகலா, பஞ்சாயத்து தேர்தல்

சினிமாவைப் போன்று சீரியல்களுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலேயும், குடும்ப பெண்களை கவரும் வகையில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்த்திகை தீபம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அந்த சீரியலின் 2ஆவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஊரிலேயே பெரிய குடும்பம் என்றால் அது சாமுண்டீஸ்வரியின் குடும்பம் தான். அவருக்கு 4 மகள்கள். அவருடைய எதிரி சிவனாண்டி ஆரம்பத்தில் இப்படி சென்று கொண்டிருந்த சீரியலில் அவர்களது குடும்பத்திற்குள் கார்த்திக் வர, ரேவதி மற்றும் கார்த்திக் இருவருக்கும் இடையில் சந்தர்ப்ப சூழல் காரணமாக திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கை வெறுத்து வந்த ரேவதி அதன் பிறகு அவர் யார் என்பது பற்றி தெரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.

24
கார்த்திக் ராஜா, சாமுண்டீஸ்வரி, ரேவதி

சீரியலின் தொடக்கத்தில் சாமூண்டீஸ்வரிக்கு எதிரியாக இருந்தவர் சிவனாண்டி மட்டுமே. அதன் பிறகு அவரது சித்தப்பாவை வில்லனாக காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அக்கா சாமூண்டீஸ்வரி உடன் இருந்து கொண்டு தனது கணவர் சிவனாண்டிக்கு ஆதரவாக செயல்பட்டார். உடன் பிறந்த சகோதரி என்றும் கூட பார்க்காமல் அவரை ஃபேக்டரியில் ஷாக் வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார்.

34
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு

ஆனால், அதிலிருந்து எப்படியோ சாமூண்டீஸ்வரி தப்பிக்க எத்தனையோ முயற்சிகளை சந்திரகலா செய்த நிலையில் இப்போது காளியம்மா என்ற புதிய கேரக்டரை ஜீ தமிழ் அறிமுகம் செய்துள்ளது. முதல் சீனே கொஞ்சம் தாறுமாறாக கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த சீசனிலேயே ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் இயக்குநர். தற்போது ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் கூழ் ஊத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கிராமத்தினர் செய்த நிலையில் பாட்டிக்கான முதல் மரியாதை மறுக்கப்பட நிலையில் இப்போது கார்த்திகை தீபம் 2 சீரியலில் பாட்டியின் பேத்திகளான ரேவதி, ரோகினி, துர்கா மற்றும் சுவாதிக்கு முதல் மரியாதை அளிக்கப்படது.

44
கார்த்திகை தீபம் 2

கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி மற்றும் கார்த்திக் இருவருக்கும் காதல் காட்சிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே தனது காதலை ரேவதி வெளிப்படுத்திய நிலையில் அவர் மீது தனக்கு காதல் இல்லை என்று கார்த்திக் மறுத்துவிட்டார். ஆனால், உன்னை தனக்கு பிடிக்கும் என்று கார்த்திக் கூறியிருந்த நிலையில் ஒரு மாதத்திற்குள்ளாக கார்த்திக்கை தன்னை காதலிப்பதாக சொல்ல வைக்கிறேன் என்று ரேவதி சபதம் போட்டுள்ளார். அப்படி முடியாத நிலையில் அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கான முதல் படியாக இன்று கார்த்திக் அருகில் தூங்க வந்தார். ஆனால், கார்த்திக் மறுத்துவிட்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories