பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் முக்கியமான வெகுளியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய 553ஆவது எபிசோடில் பாண்டியன் தனது மகளுக்காக ஆட்டோவில் மைக் செட் கட்டிக் கொண்டு அதில் இனிமேல் தனது மகளைப் பற்றி யாராவது பேசினால் நடப்பதே வேறு என்று பேசிவிட்டு வந்துவிட்டார்.
25
அரசு வேலை பற்றி பேசிய செந்தில்
இச்சம்பவம் செய்தியாக வெளியானது. ஊரே பாண்டியனைப் பற்றி பேசியது. அதுமட்டுமின்றி அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தது. இது தொடர்பாக குடும்பத்தினர் சரியா தவறா என்று விவாதம் செய்தனர். அதற்கு அரசி அப்பாவிற்கு ஆறுதலாக செயல்பட்டார்.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 553ஆவது எபிசோடு
இது ஒரு புறம் இருக்க, கோமதி சும்மா இருக்காம, செந்திலுடம் உன்னுடைய அரசு வேலை எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டார். அதற்கு செந்தில் அப்படியே சொர்க்கத்தில் மிதந்தபடி அரசுவேலையின் மகத்துவம் பற்றி பேசினார். மேலும், வேலை நேரத்தைவிட பிரேக்கிற்கான நேரம் அதிகம். மேலும் காலையில் அயர்ன் பண்ணூம் டிரஸ் அப்படியே மாலை வரை கசங்காமல் இருக்கும் என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார். அடுத்ததாக கதிர் மற்றும் ரேவதி இருவரும் போலீஸ் எஸ் ஐ வேலை பற்றி பேசிக் கொண்டனர்.
45
கதிர் மற்றும் ராஜீ
ராஜீ இப்போது வரையில் டிரைனிங் செல்லவில்லை. கோச்சிங் கிளாசிற்கு பீஸ் கட்டியதோடு சரி, அதன் பிறகு அந்த பக்கமே ராஜீ செல்லவில்லை. அதை பற்றி கதிர் யோசிக்கவே இல்லை. அடுத்த பேட்ச் இந்த மாத கடைசியில் ஆரம்பிக்கும் நிலையில் நான் எப்படி ஜாயின் பண்ணிடுறேன் என்றார். மேலும் இருவரும் குழந்தை பிடிக்குமா என்பது பற்றி பேசிக் கொண்டனர். அப்போது, கதிரைப் பார்த்து உனக்கு குழந்தை என்றால் பிடிக்குமா என்று கேட்டார் ராஜீ.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
மேலும் கதிர் சும்மா இருக்காமல் உனக்கு பிறக்கும் குழந்தை என்னை எப்படி கூப்பிடும் என்று கேள்வி எழுப்பினார். அது ராஜீக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தவே அப்படியே படுத்து தூங்கிவிட்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.