Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக்கை சிக்க வைக்கவும், சாமுண்டீஸ்வரியை கொலை செய்யவும் சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.
Karthigai Deepam 2 Serial Today Episode :ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் பழிதீர்க்க சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்றனர். ஆனாலும், அதிலிருந்து கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் அதிலிருந்து தப்பித்து வருகின்றனர். இதே போன்று ரேவதியையும் கொலை செய்ய திட்டம் போடுகின்றனர்.
24
ரேவதி அண்ட் கார்த்திக்
இந்த நிலையில் தான் ரேவதி தனது காதலை கார்த்திக்கிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், கார்த்திக் தனது மனதில் தீபாவைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த ரேவதி உன்னை எப்படியாவது காதலிக்க வைக்கிறேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
34
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இந்த சபதத்தில் ரேவதி தோற்றால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட வேண்டும் என்று கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையில் டீலிங் போடப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்றைய எபிசோடில் ரேவதி தனது பாண்டியுடன் இணைந்து அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இதை அறிந்து கொண்ட சிவனாண்டி எப்படியாவது அவர்கள் கூழ் ஊற்றுவதை தடுக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார். இவர்களது திட்டம் பற்றி தெரிந்து கொண்ட மயில் வாகனம் தனியாக பிளான் போடுகிறார். அதாவது, எப்படியாவது சாமி வந்த மாதிரி ஆடி சிவனாண்டியின் பிளானை முறியடிக்க வேண்டும் என்பது தான் அது.
44
கார்த்திகை தீபம் 2
அப்போது அருண் தனது தம்பி கார்த்திக்கிற்கு போன் போட்டு முக்கியமான ஆன்லைன் மீட்டிங் இருப்பதாக கூறுகிறார். உடனே ஆன்லைன் தானே நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதைப் பற்றி எப்படியோ தெரிந்து கொண்ட சந்திரகலா கார்த்திக்கை சிக்க வைக்க திட்டம் போடுகிறார். இது ஒரு புறம் இருக்க சாமுண்டீஸ்வரியை கொல்லவும் திட்டம் போடுகின்றனர்.
அதற்கு இடையூறாக இருக்கும் கார்த்திக்கை சென்னைக்கு அனுப்பி வைக்க திட்டமும் நடக்கிறது. அந்த தருணத்தில் சாமுண்டீஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகிறார் சந்திரகலா. இப்படியான சூழலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்.