விஜய் டிவியில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. அந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது அந்நிகழ்ச்சியின் 6வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே குக் வித் கோமாளிக்கு போட்டியாக கடந்த ஆண்டு சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்கிற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
24
டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 போட்டியாளர்கள்
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவலை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். ஆனால் அதில் சிலரது பெயர்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டிய பெசன்ட் நகர் ரவி டாப் குக்கு டூப் குக்கு 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளாராம். இவரும் சென்னையில் சொந்தமாக ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருடன் பிரபல நகைச்சுவை நடிகரும், விஜய் டிவி பிரபலமுமான ரோபோ சங்கரும் ஒரு போட்டியாளராக களமிறங்க உள்ளாராம்.
34
டாப் குக்கு டூப் குக்கு 2-வில் இந்த நடிகைகளும் இருக்காங்களாம்
நடிகர்களை தொடர்ந்து இரண்டு நடிகைகளின் பெயர்களும் அடிபடுகின்றன. அதில் ஒருவர் கிரண். தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வந்த கிரண், சமீப காலமாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வரும் நிலையில், அவர் டாப் குக்கு டூப் குக்கு 2 நிகழ்ச்சி மூலம் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகை பிரியங்காவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம். இவர் மருதமலை படத்தில் போலீஸாக இருக்கும் வடிவேலுவிடம் தஞ்சம் கேட்டு செல்லும் பெண்ணாக நடித்திருப்பார். அந்த காமெடி காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் போட்டியாளராக களமிறங்க உள்ளார். அவர் வேறுயாருமில்லை சிவானி நாராயணன் தான். விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன சிவானி. அதன்பின்னர் விதவிதமாக போட்டோஷூட் நடத்தியதன் மூலம் இன்ஸ்டாவில் இளசுகளை கவர்ந்தார். பின்னர் விக்ரம் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சிவானி, அதன்பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு 2 நிகழ்ச்சி சிவானிக்கு தரமான கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.