இந்த நிலையில் தான் இப்போது பாட்டி வீட்டில் இருக்கும் ரேவதி, கார்த்திக்கிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார். அதற்கு முன்னதாக கண்ணைக் கட்டி விளையாடும் விளையாட்டின் போது கார்த்திக்கை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். அதன் பிறகு பாட்டிக்கு கொடுக்க நினைத்து அது எப்படியோ மாறிப்போய்விட்டது என்றார். இந்த நிலையில் தான் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக பீச்சில் ஒன்றாக அமர்ந்து நிலா சோறு சாப்பிடும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதில், ரேவதி கார்த்திக்கிடம் இதில், ரேவதி கார்த்திக்கிடம் தனது காதலை சொல்லவே, கார்த்திக் முடியாது, கடைசி வரை தனது மனதில் தீபாவிற்கு மட்டுமே இடமுண்டு என்று கூறிவிட்டார். இது ரேவதிக்கு ஏமாற்றமாக இருந்தாலும், எப்படியாவது உன்னை காதலிக்க வைக்கிறேன் என்று சபதம் போட்டுள்ளார்.