சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான் டிஆர்பி ரேஸில் அடிக்கடி போட்டி இருக்கும். இந்த போட்டியில் ஜீ தமிழ் சீரியல்களும் அவ்வப்போது சீனுக்கு வரும். ஆனால் கடந்த சில வாரங்களாக டாப் 10 இடங்களையும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அந்த வகையில் 2025ம் ஆண்டின் 30வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக சன் டிவி செம டஃப் கொடுக்கும் விஜய் டிவி சீரியல்கள் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து உள்ளன. இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து உள்ளது என்பதை பார்க்கலாம்.
24
டாப் 10 தமிழ் சீரியல்கள்
கடந்த வாரம் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 6.65 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் அதனை பின்னுக்கு தள்ளி ராமாயாணம் தொடர் 10வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 6.59 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 7.26 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து 6.64 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 7.64 புள்ளிகள் பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.89 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் நீடிக்கிறது.
34
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பின்னடைவு
கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 7ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் வெறும் 8.04 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 6வது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 8.51 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் அசுர வேகத்தில் முன்னேறிய சீரியல் என்றால் அது சன் டிவியின் அன்னம் சீரியல் தான். இந்த சீரியல் கடந்த வாரம் 7.92 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.65 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
வழக்கம்போல் இந்த வாரமும் டாப் 4 இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் தட்டி தூக்கி உள்ளன. அந்த வகையில் சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, இதுவரை இல்லாத வகையில் புது உச்சமாக 9.02 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கயல் சீரியல் 9.33 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.70 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் தான் உள்ளது. இந்த சீரியலில் கடந்த வாரம் ஆனந்தியின் கர்ப்ப விவகாரம் வெளிவந்த நிலையில், அதன் டிஆர்பியும் புதிய உச்சமாக 11.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது.