சின்னத்திரை சீரியல்களில் சன் டிவிக்கு செம டஃப் கொடுத்து வந்த விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில வாரங்களாக டல் அடிக்க தொடங்கியுள்ளன. விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து வருவது அதன் டிஆர்பி நிலவரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் 30 வது வாரத்தின் டிஆர்பி நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் டிஆர்பி யில் பயங்கர அடி வாங்கி இருக்கிறது விஜய் டிவியின் நட்சத்திர தொடர்கள். இந்தப் பட்டியலில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் என்னென்ன? அதன் டிஆர்பி நிலவரம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
டாப் 5 விஜய் டிவி சீரியல்
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் மகாநதி சீரியல் தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 5.67 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்த மகாநதி சீரியல் இந்த வாரம் வெறும் 5.11 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சின்ன மருமகள் சீரியல் உள்ளது. நவீன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 6.65 டிஆர்பி பெற்று நான்காம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் அதற்கு வெறும் 6.24 டிஆர்பி மட்டுமே கிடைத்திருப்பதால் இந்த சீரியலும் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது.
34
சறுக்கும் விஜய் டிவி சீரியல்கள்
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.64 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கிறது. அதேபோல் இரண்டாம் இடத்தில் உள்ள அய்யனார் துணை சீரியல் 6.89 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. வழக்கம்போல் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.04 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த மூன்று சீரியல்களும் மிகப்பெரிய அளவு சரிவை சந்தித்து உள்ளன.
விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அதன் கிளைமாக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு தொடர் முடியப்போகிறது என்றால் அதன் கிளைமாக்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறும். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலை பொருத்தவரை டாப் 5 பட்டியலுக்குள் கூட வரவில்லை. கடந்த வாரம் 4.43 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரமும் பிக்கப் ஆகவில்லை. இதனால் டிஆர்பி ரேஸிலும் பின் தங்கிய நிலையில் முடிவுக்கு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.