சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக எதிர்நீச்சல் தொடர்கிறது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லனாக நடிக்கும் ஆதி குணசேகரன் தன்னுடைய மனைவியான ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொல்லப் பார்க்கிறார். இதில் நிலைகுலைந்து போகும் ஈஸ்வரி மயங்கி விழுகிறார். இதை அடுத்து ஈஸ்வரியை மீட்கும் தர்ஷன் மற்றும் நந்தினி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் சுயநினைவை இழந்து விட்டதாக கூறுவதோடு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள். ஈஸ்வரி என் ஆப்பரேஷனுக்கான வேலைகள் நடந்து வருகிறது.
24
உண்மையை உடைக்கும் ஜீவானந்தம்
கனடாவுக்கு படிக்கச் செல்லும் பார்கவியை வழி அனுப்பி வைக்க ஏர்போர்ட்டுக்கு அவருடன் காரில் செல்லும் ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் தெரிய வருகிறது. பின்னர் பார்கவியை காரில் ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மதுரைக்கு விரைகிறார் ஜீவானந்தம். அங்கு ஈஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு அவர் வந்தபோது பார்கவி பற்றி கேட்கிறார் தர்ஷன். அப்போது பார்கவி கனடா செல்லும் விஷயத்தை போட்டு உடைக்கிறார் ஜீவானந்தம். இனி பார்கவி திரும்பி வரவும் மாட்டா... உன்னுடைய வாழ்க்கையில் தலையிடவும் மாட்டா என தடாலடியாக கூறுகிறார் ஜீவானந்தம்.
34
சந்தேகப்படும் தர்ஷினி
ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்த கொற்றவை அங்கு வர, அவரிடம் கதறி அழும் தர்ஷினி, தன் அம்மா இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் தன்னுடைய தந்தை ஆதி குணசேகரன் தான் என அடித்துக் கூறுகிறார். அம்மாவுக்கும் அவருக்கும் இடையே மோதல் இருந்து கொண்டு இருந்ததாகவும், கண்டிப்பாக அந்த ஆள் தான் ஏதாவது செய்திருப்பார் என்றும் கொற்றவை இடம் கூறுகிறார் தர்ஷினி. இதனால் அனைவரின் சந்தேகமும் ஆதி குணசேகரன் பக்கம் திரும்புகிறது. கொற்றவை போலீஸ் என்பதால் அவர் அடுத்த கட்ட ஆக்ஷனில் இறங்கவும் தயாராகி வருகிறார்.
மறுபுறம் வீட்டிலிருந்து ஈஸ்வரியை பார்க்க கிளம்பிய விசாலாட்சியை தடுக்கும் ஆதி குணசேகரன், இந்தப் பிரச்சினையை வைத்து அவர்கள் அனைவரும் நம்மை சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள் என்றும் நமக்கு எவ்வளவு கேடு நினைப்பவர்களுக்கா நீ கரிசனம் காட்டுகிறாய் என விசாலாட்சியிடம் கேட்கிறார் குணசேகரன். இதன் மூலம் ஆதி குணசேகரன் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரியின் இந்த நிலைக்கு ஆதி குணசேகரன் தான் காரணம் என்பது தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.