எங்க அம்மாவா இப்படி? விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; குழப்பத்தில் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Aug 07, 2025, 09:33 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் டாக்டர் பட்டம் வாங்குவதற்காக விஜயா செய்யும் வேலைகளால் முத்துவுக்கு அவர் மீது சந்தேகம் வருகிறது.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

விஜய் டிவியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். இந்த சீரியலில் முத்துவின் அம்மா விஜயா, எப்போதும் தன்னுடைய மருமகள் மீனா மீது சிடுசிடுவென இருப்பார். ஆனால் சமீப காலமாக மீனாவிடம் கொஞ்சிக் குலாவி வருகிறார். அவரின் இந்த மாற்றத்திற்கு பின் ஒரு காரணம் இருக்கிறது. தனக்கு டாக்டர் பட்டம் வாங்குவதற்காக தன்னை நல்லவள் போல் காட்டிக் கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து வருகிறார் விஜயா. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

24
டாக்டர் பட்டம் பெற விஜயா போடும் நாடகம்

விஜயா டாக்டர் பட்டத்திற்காக தான் இதெல்லாம் செய்கிறார் என்பது வீட்டில் உள்ள யாருக்குமே தெரியாது. முன்னதாக மீனாவுக்கு சேலை வாங்கித் தருவது, அவரை தங்கம் செல்லம் என கொஞ்சுவது போன்ற வீடியோக்களை எடுத்திருந்தார். அதன் பின்னர் கிரிஷ் உடன் விளையாடுவது போலவும், அவருடன் டான்ஸ் ஆடி ஜாலியாக இருப்பது போலவும் வீடியோ எடுத்தார் விஜயா. இது போதாது இன்னும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவை தானே முன்னெடுத்து நடத்துவதாக கூறி அதிர்ச்சி கொடுக்கிறார் விஜயா. 

34
சந்தேகத்தில் முத்து

இந்த விழாவுக்காக மீனாவை அழைக்க அவரது அம்மா வீட்டுக்கு வந்தபோது, நானெல்லாம் இதில் கலந்து கொள்ளக் கூடாதா என்று விஜயா கேட்க, அதற்கு மீனாவின் அம்மாவும் சம்மதம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் முத்துவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது. நம்ம அம்மாவா இப்படி செய்கிறார் என்று சந்தேகப்படுகிறார் முத்து, அதேபோல் மீனாவும் குழப்பத்தில் இருக்கிறார். பின்னர் அந்த விழாவுக்கு செல்லும் விஜயா, அங்கு வந்தவர்களுடன் வீடியோ எடுப்பது மட்டுமின்றி தாலி கோர்க்கும் விழாவையும் முன் நின்று நடத்தி வைக்கிறார். 

44
சிக்குவாரா விஜயா?

விஜயாவின் தலைமையில் அந்த விழா சிறப்பாக நடந்து முடிகிறது. இதையடுத்து விஜயா அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில் அனைவருக்கும் உணவு பரிமாறுகிறார் விஜயா. அப்போது அந்த வரிசையில் வந்து உணவு வாங்க வந்த முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் விஜயா. அப்போது முத்து தனது அம்மாவிடம் மிகவும் எமோஷனலாக பேசுகிறார். இதன் பின் என்ன ஆனது? விஜயா வின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்ததா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories