தலைவர் 171 படத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் சமூக அக்கறை கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்க உள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.