சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில், மொய் தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆவதை படக்குழு ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.