மலையாள சினிமா மூலம் திரைத்துறையில் எண்ட்ரி கொடுத்தவர் பார்வதி நாயர். மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அவர் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம்,, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார்.
மேலும் சில கன்னட படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு பார்வதி நாயருக்கு கிடைத்தது. எனினும் மலையாள மொழியில் ரசிகர்களை ஈர்த்த அளவுக்கு அவர் தமிழிலோ அல்லது கன்னடத்திலோ பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
திரைப்படங்கள் மட்டுமின்றி மாடலிங் துறையிலும் பார்வதி நாயர் கலக்கி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.