அதே போல் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த நிலையில், அதை மறுத்த கவிதா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதனிடையே அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.