இந்த வார TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சன் டிவி சீரியல்.. எதிர்நீச்சல் சீரியலோட நிலை என்ன?

First Published | Nov 10, 2023, 10:25 AM IST

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெற்றுள்ள டாப் 10 தமிழ் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Ethirneechal and Kayal

என்ன தான் காலங்கள் மாறினாலும், சீரியல்களுக்கான மவுசு மட்டும் இன்னும் குறையவே இல்லை. முன்பெல்லாம் டிவியில் பார்க்க முடிந்த சீரியல்களை இப்போது ஃபோனிலேயே பார்க்க முடிகிறது. அதனால் தான் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒரு சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் கிராமங்களிலும், நகரங்களிலு அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்படும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும். இந்த டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும்  மாறுபடும். எனவே இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெற்றுள்ள டாப் 10 தமிழ் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

கயல் :

சனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 2-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 10.85 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

வானத்தைப்போல :

இந்த வாரம் 2-வது இடத்தை பிடித்திருக்கும் சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப்போல. இந்த சீரியல் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 2-வது இடம் பிடித்துள்ளது. இந்த வாரம் இந்த சீரியலுக்கு 10.72 புள்ளிகள் கிடைத்துள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

சிங்கப்பெண்ணே:

புதிதாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் 3-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த சீரியலில் டி.ஆர்பி ரேட்டிங் 10.65 ஆகும்.

எதிர்நீச்சல் :

நடிகர் மாரிமுத்து இருந்த வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் அவர் இறந்த பிறகு தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 9.99 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரமும் இந்த சீரியல் 4-வது இடத்தில் தான் இருந்தது.

சுந்தரி :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த சீரியலுக்கு கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 9.94 ஆகும்.

Iniya Serial

இனியா :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 6-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 7.96 ஆகும்.

தீபாவை வேலைக்கு எடுத்தாரா கார்த்திக்? தொடங்கும் புதிய காதல் பயணம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
 

சிறகடிக்க ஆசை :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7.84 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

ஆனந்த ராகம் :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் -வது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.59 புள்ளிகளை பெற்றுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 9-வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 7.08 ஆகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 10-வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 6.71 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Latest Videos

click me!