புதுப்படங்கள், ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என செம ட்ரீட் வெயிட்டிங்.... ஜீ தமிழின் தீபாவளி ஸ்பெஷல் என்ன? முழு விவரம்

First Published | Nov 9, 2023, 2:14 PM IST

தீபாவளி பண்டிகைக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்கள் மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில் புதுபுது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதே போல் பண்டிகை தினங்களில் மக்களை மகிழ்விப்பதில் ஜீ தமிழ் எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது.

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது நவம்பர் 12-ந் தேதி தீபாவளி அன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் உணவு பற்றிய விழிப்புணர்வு. வளர்ந்து உள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், ஆர் ஜே ஆனந்தி, நீலகண்டன், பர்வீன் சுல்தானா, சாந்தமணி, சிவா சதீஸ் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. 

அதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 12.30 மணி முதல் மக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023-ன் முதல் பாகம் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.  ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023 நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நவம்பர் 12-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேவரைட் நடிகர்கள், பேவரைட் சீரியல், பெஸ்ட் சீரியல், பெஸ்ட் நடிகர்கள் என பல கேட்டரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்படுகிறது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 1 மாதம் கேம்பைன் நடத்தி தகுதியான மணமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு 5 சவரன் நகை அளித்து ஜீ தமிழ் பிரபலங்கள் முன்னிலையில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வைத்த பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தது. திருமணம் முடிந்ததும் மணமக்களின் உணர்வுபூர்வமான தருணங்ளை பகிர்ந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து பேவரைட் நடிகருக்கான விருதை வென்ற கார்த்திக் ராஜ்க்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றுடன் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போல் விருதுகளை வென்றவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ், அவர்கள் கடந்த வந்த பாதைகள் என நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த பகுதியாக பார்ட் 2 ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் மாரி சீரியல் நாயகியான ஆஷிகா படுகோனே தமிழ், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி என நான்கு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருவதால் அவருக்கு பான் இந்தியா ஸ்டார் விருதை வழங்கி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வழங்கியுள்ளார். ஆஷிகாவிற்கு நான்கு மாநிலத்தை சேர்ந்த ரசிகர்களும் ஒன்று சேர்ந்து பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 

Tap to resize

DD returns

இப்படி பல உணர்வுபூர்மான தருணங்களுடன் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பகுதி 2 ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது போல இரண்டாவது பாகமும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கலாம். தீபாவளி தினத்தில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா பார்ட் 2-வை மிஸ் பண்ணாம பாருங்க.

அடுத்ததாக மாலை 4.30 மணி முதல் சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி கலந்த திகில் த்ரில்லர் திரைப்படமான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இறுதியாக இரவு 7 மணி முதல் 10 மணி வரை சரிகமப சுட்டிஸ் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிரடியான நிகழ்ச்சிகளுடன் ஜீ தமிழுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்.

இதையும் படியுங்கள்... பான் இந்தியா ஸ்டார்ஸுக்கு பயந்து பரம எதிரியிடம் பலத்தை காட்டப்போகிறாரா தனுஷ்? கேலிக்குள்ளான கேப்டன் மில்லர்!

Latest Videos

click me!