தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி தீபாவை தவிர்த்து வீட்டில் உள்ள எல்லாரிடமும் புதிய கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொன்னதை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
karthigai deepam serial
அதாவது, மறுநாள் காலையில் தீபா கார்த்திக்கிடம் நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் சார், போகட்டுமா என்று கேட்க வெளியே வேலைக்கு போகிறதுக்கு நம்ம கம்பெனிக்கே வாங்க என்று அழைக்க, தீபா, அபிராமி சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து நான் வெளியேவே வேலைக்கு போறேன் என்று சொல்ல கார்த்தியும் தீபா மனநிலையை புரிந்து கொள்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அடுத்ததாக தீபா அபிராமி ஆடியோ கம்பெனிக்கு இன்டர்வியூக்கு வருகிறாள், கார்த்திக் அங்கு ஒவ்வொருத்தரையாக அழைத்து இன்டெர்வியூ எடுத்து கொண்டிருக்க ஸ்னேகா தீபா மீது இருக்கும் பழைய வன்மத்தை மனதில் வைத்து கொண்டு resume இல்லாமல் வந்ததால் நீங்க நேர்காணலில் பங்கேற்க முடியாது என ஷாக் கொடுக்கிறாள்.
44
karthigai deepam today episode
அந்த நேரம் பார்த்து இளையராஜா அங்கு வர அவன் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல தீபாவை உள்ளே அழைக்க, கார்த்திக்கை பார்த்த அவள் ஷாக் ஆகிறாள். இதனை தொடர்ந்து கார்த்திக் சரி நான் உங்களை இன்டெர்வியூ எடுக்கறேன், நீங்க வேற ஏதாவது கம்பெனிக்கு போனால் பயன்படும் என்று சொல்லி கேள்விகளை கேட்க, தீபா அனைத்திற்கும் அசால்டாக பதில் சொல்லி அசர வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.