தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டி சட்டையை பிடித்து எங்க அம்மா உன்ன உயிரோட விட்டு வைக்க சொல்லி இருக்கா அதனால தான் நீ இன்னமும் உயிரோட இருக்க என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Zee tamil Anna serial
அதாவது சூடாமணி ஜெயிலில் இருக்கும் விஷயம் சண்முகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இதுக்கு மேலயும் அவனை உயிரோடு விட்டு வைக்க கூடாது என்ற முடிவுக்கு வருகிறார் சௌந்தரபாண்டி. இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி ரத்னா எனக்கு பொண்டாட்டி ஆகி நம்ம வீட்டுல அடிமையா கிடக்கும் என சொல்கிறான்.
அது மட்டுமல்லாமல் அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன், இந்த ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு, அவளை நான் தான் வேணான்னு சொல்லணும் அவ என்ன வேணான்னு சொன்னதா இருக்க கூடாது என கூறுகிறான். பிறகு விழா மேடையில் பிரசிடென்ட்டை மேடைக்கு கூப்பிட சண்முகம் அங்கு சென்று விட முத்துப்பாண்டி திரும்பவும் ரத்னாவின் கையைப் பிடித்து தாலி கட்ட இழுத்துச் செல்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
திடீரென ஒரு சூலாயுதம் பறந்து வந்து முத்துப்பாண்டி கையில் இருக்கும் தாலியை பறித்துக் கொண்டு போக, பின்னாடி சண்முகம் இருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு ரத்னா முத்துப்பாண்டி கையை திருப்பி இழுத்துச் சென்று ஊர் மக்களுக்கு முன்னாடி நிற்க வைத்து நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் என கூறுகிறார். ஆனால் ரத்னா, எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு துளி கூட தோணல என அதிர்ச்சி கொடுக்கிறாள்.
44
Anna serial today episode
அதுவுமில்லாமல் நீ அண்ணனோட சண்டை போட்டு அவனை ஜெயிச்சுட்டேன்னா என் கழுத்துல தாலி கட்டலாம் என சொல்கிறாள். பிறகு சண்முகத்திடம், அண்ணா இவன் இருக்கிற வரைக்கும் நாம நிம்மதியா இருக்க முடியாது ஒன்னு இவனை தோற்கடி, இல்லைன்னா இவனை கொன்னுடு என சொல்கிறாள் ரத்னா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.