தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டியும் அரக்கன் வேடத்தில் இருக்கும் நான்கு ரவுடிகளும் ரத்னாவை ரவுண்டு கட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Anna serial
அதாவது, ரத்னா இவர்களிடம் இருந்து தப்பி ஓடி வர முத்துபாண்டி ரவுடிகளிடம் இன்னிக்கி அவள விடக்கூடாது தாலி கட்டியே ஆகணும் என சொல்லி ரத்னாவை துரத்தி வர, கனி இதைக் கேட்டு விட்டு அண்ணனிடம் சொல்ல ஓட, முதலில் அவளை புடிங்கடா என கனியையும் துரத்த அவள் வைகுண்டத்திடம் ஓடி வந்து விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைய ரத்னா அங்கிருந்து தப்பி ஓட திரும்பவும் அவளை துரத்துகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
ரத்னாவை ஒரு கைப்பிடித்து இழுக்க, இன்னொரு பக்கம் அம்மன் வேடத்தில் இருக்கும் ஒரு பெண்ணை முத்துப்பாண்டியின் ஆட்கள் கடத்திச் செல்கின்றனர். இங்கே ரத்னாவை பிடித்து இழுத்து காப்பாற்றியது வெங்கடேஷ் தான் என தெரிய வருகிறது. ஒரு பக்கம் வெங்கடேஷ் ரத்னா கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க, இன்னொரு பக்கம் சண்முகம், முத்துப்பாண்டி மீது கோபமாக இருக்க, வைகுண்டம் அவனை சமாதானம் செய்கிறார்.
44
Anna serial today episode
பிறகு சௌந்தரபாண்டி, ரத்னா இப்போ எங்க பிடியில சிக்கிட்டா, முத்துப்பாண்டி அவளுக்கு தாலி கட்டி தான் கூட்டி வருவான் என்று சொல்ல, அப்போ இது யாரு என ரத்னாவை காண்பிக்க சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இங்க முத்துப்பாண்டி அம்மன் கெட்டப்பில் இருக்கும் பெண்ணுக்கு தாலி கட்ட போக சௌந்தரபாண்டி அதை தடுக்க ஓடி வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்கிற விறுவிறுப்போடு இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.