புது சீரியலுக்கு கிடைச்ச வரவேற்புகூட எதிர்நீச்சலுக்கு இல்லையா? டிஆர்பியில் அதளபாதாளத்துக்கு சென்ற எதிர்நீச்சல்

First Published | Nov 3, 2023, 2:09 PM IST

மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் எதிர்நீச்சல் சீரியலுக்கு வரவேற்பு குறைந்து வருவதால் அதன் டிஆர்பியும் செம்ம அடி வாங்கி இருக்கிறது.

Ethirneechal

சீரியல்களின் வெற்றி, தோல்வி அதன் டிஆர்பி புள்ளிகளை வைத்து தான் கணிக்கப்படும். அந்த வகையில் இந்த டிஆர்பி போட்டியில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி போட்டியில் பெரும்பாலும் முதலிடம் பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஓராண்டாக சக்கைப்போடு போட்டு வந்தது.

Marimuthu, vela ramamoorthy

எதிர்நீச்சல் சீரியலில் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவரின் நடிப்பு, டயலாக் டெலிவரியும், அவரை உலகளவில் டிரெண்ட் ஆக்கியது. இதனால் அந்த சீரியலில் டிஆர்பியும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. இந்த நிலையில், நடிகர் மாரிமுத்து கடந்த செப்டம்பர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு எதிர்நீச்சல் சீரியலையும் பெரியளவில் பாதித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos


ethirneechal vela ramamoorthy

எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு பதிலாக ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி தேர்வானாலும், அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பதால் ரசிகர்களுக்கு அந்த சீரியல் மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டது. இது டிஆர்பியிலும் எதிரொலித்து உள்ளது. டிஆர்பி பெரும்பாலும் முதலிடம் பிடித்துவரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்து 4-வது இடத்துக்கு சென்றுவிட்டது. அண்மையில் தொடங்கப்பட்ட புது சீரியலான சிங்கப்பெண்ணே டிஆர்பியில் எதிர்நீச்சலை முந்தி 3-வது இடம் பிடித்துள்ளது.

ethirneechal TRP

இந்த டிஆர்பி பட்டியலில் வானத்தைப்போல தொடருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தை கயல் சீரியல் தட்டிச்சென்றுள்ளது. அதேபோல் சுந்தரி, இனியா மற்றும் ஆனந்த ராகம் ஆகிய சன் டிவி சீரியல்கள் முறையே 5,6 மற்றும் 7-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் 8, 9 மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்.. ரிலீசாகி 15 நாட்களில் லியோ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ இனி ஜெயிலர் வசூலை கிட்ட கூட நெருங்க முடியாதே!

click me!