அரக்கனாக வேஷம் கட்டும் முத்துப்பாண்டிக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

Published : Nov 01, 2023, 01:07 PM IST

மிர்ச்சி செந்தில் நடிக்கும் அண்ணா சீரியலில் இன்று முத்துப்பாண்டி அரக்கனாக வேஷம் போட்ட பின் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
அரக்கனாக வேஷம் கட்டும் முத்துப்பாண்டிக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்
Anna serial mirchi senthil

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குறிகேட்க அவனை சிவன் கெட்டப் போட சொல்லியிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
zee tamil Anna serial

அதாவது ரத்னா அடுத்ததாக குறி கேட்க அவளை அம்மன் வேடம் போட சொல்லி உத்தரவு வருகிறது, மறுபக்கம் இன்னொருவரிடம் முத்துப்பாண்டி வேஷம் கட்டுவது குறித்து குறி கேட்க அரக்கன் வேஷம் போடு, நீ அரக்கனாக எல்லாரையும் அழிக்க பிறந்தவன் என்று சொல்லி ஷாக் கொடுக்க அவன் வேறு வழியில்லாமல் வேஷம் போட தயாராகிறான். 

அதனை தொடர்ந்து ஷண்முகம் சிவன் வேஷம் போடும் போது சாமி அவனிடம் நீ அரக்கனை அழிக்க பிறந்தவன் என்று சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்து போகிறது. அடுத்து ரத்னா அம்மன் வேஷம் போட்டு கொண்டு சாந்தகமாக கோவிலுக்கு நுழைகிறாள்.

34
Anna serial today episode

இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி வேஷம் கட்டி கொண்டிருக்க அங்கு வரும் பாக்கியம் என்ன வேஷம் என்று கேட்க எல்லாம் கெத்தான வேஷம் தான் என்று சொல்ல அப்படி என்ன வேஷம் என்று கேட்கிறாள், முத்துபாண்டி அரக்கன் வேஷம் என சொன்னதும் பாக்கியம் உனக்கு சரியான வேஷம் தான், நீ அரக்கன் தான் என்று கலாய்த்து கிளம்புகிறாள். 

44
Anna serial

பிறகு முத்துப்பாண்டி வேஷம் கட்டி கொண்டு ரத்னாவை பார்க்க வர சிவனாக ஷண்முகம் நடுவில் வந்து நிற்க இருவரும் ஒருவரை முறைத்தபடி நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... முத்து பட பாணியில் நடந்த கூத்து... மலர் போட்ட லெட்டரால் நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories