மாரிமுத்து இல்லாததால் டம்மி ஆன எதிர்நீச்சல்... வேறுவழியின்றி புது சீரியலை களமிறக்கும் சன் டிவி

First Published | Oct 23, 2023, 2:29 PM IST

சன் டிவியில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது டம்மி ஆனதால், புது சீரியல் ஒன்றை சன் டிவி களமிறக்கி உள்ளது.

ethirneechal serial

சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் சன் டிவி வரலாற்றிலேயே ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் என்றால் அது எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடர் தான் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பான தொடர் ஆகும்.

Ethirneechal Marimuthu

எதிர்நீச்சல் தொடர் இந்த அளவுக்கு மாஸான வரவேற்பை பெற்றதற்கு அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான் காரணம். அவரின் நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால், அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக மாறினார் மாரிமுத்து. இவர் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

vela ramamoorthy

அவரின் மறைவுக்கு பின்னர் அடுத்த ஆதி குணசேகரனை தேர்ந்தெடுக்கவே படாதபாடு பட்ட சீரியல் குழுவினர், இறுதியாக வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வைத்தனர். அவர் வந்து ஒரு வாரம் தான் நடித்தார். அவரின் நடிப்பு எடுபடாததால் அவரது கேரக்டரை அப்படியே டம்மி ஆக்கிவிட்டனர். திரைக்கதை பல்வேறு மாற்றங்கள் செய்தும் எதிர்நீச்சலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. டிஆர்பியும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது.

Poova thalaiya

இந்த நிலையில், டிஆர்பி-க்காக எதிர்நீச்சலை மட்டும் நம்பி இருக்காமல் புதிய தொடர் ஒன்றை களமிறக்குகிறது சன் டிவி. பூவா தலையா என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்வேதா நடிக்க உள்ளார். இவர் ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்தவர் ஆவார். நகர வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த தொடர் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?

Latest Videos

click me!