ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சிவன் வேடத்தில் முத்துப்பாண்டி அரக்கன் வேடத்தில் நேருக்கு நேராக சந்தித்து முறைத்துக் கொள்ள இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Anna serial update
அதாவது, முத்துப்பாண்டி பின்னாடி மேலும் 4 ரவுடிகள் அரக்கன் கெட்டப்பில் வந்து நிற்கின்றனர். சண்முகம் சிவன் படத்தில் கூட்டத்திற்கு நடுவே நடனம் ஆடிக்கொண்டிருக்க அதை கேரளாவைச் சேர்ந்த மனோஜூம் அவனது தாத்தாவும் அதை பார்த்து விடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு உள்ளேயே சண்முகத்தை கொலை செய்ய ப்ளான் போடுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
மேலும் ரத்னாவை தவிர்த்து மற்ற மூன்று தங்கைகளும் ஆண் கெட்டப்பில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வரும் சிவபாலன் இசக்கிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க, அவள் யாருடா நீ என மிரட்ட, அவன் நான் தான் சிவபாலன் என சொல்கிறான். இதைப் பார்த்த சௌந்தரபாண்டி இவன் பொம்பளை கெட்டப் போட்டாலும் அவ பின்னாடி சுத்துறது விடமாட்டான் என புலம்புகிறார்.
44
zee tamil Anna serial
அதன் பிறகு ரத்னா அம்மன் வேடத்தில் மடி பிச்சை ஏந்தி பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இதை அரக்கன் கெட்டப்பில் இருக்கும் ரவுடிகள் பார்த்து முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் ரத்னாவின் கழுத்தில் தாலி கட்ட கிளம்பி வருகிறான். இன்னொரு பக்கம் சண்முகத்தைக் கொல்ல மனோஜ் கூட்டத்துக்குள் கத்தியுடன் நுழைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்கிற பரபரப்பான கதைகளத்துடன் அண்ணா சீரியல் அமைந்துள்ளது.