தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்று நடக்கப்போவது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது நேற்றைய எபிசோடில் மலர் மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு நெக்லஸை திருடி தீபாவின் பேக்கில் வைத்து நெக்லஸை காணவில்லை என கிளப்பி விட்ட நிலையில் இன்று தீபாவின் பேக்கில் நெக்லஸ் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
23
karthigai deepam serial
இருந்தாலும் கார்த்திக் தீபாவை விட்டுக் கொடுக்காமல் இதை தீபா எடுத்து இருக்க மாட்டாங்க யார் எடுத்தாங்க என்பதை நான் வெளிப்படையாக சொல்றதுனால இந்த குடும்பத்துக்கு தான் அவமானம் அதனால நான் அதை சொல்ல விரும்பல என்று சொல்கிறான்.
பரமேஸ்வரி பாட்டியும் அந்த நெக்லஸ தீபாவுக்கு கொடுக்கணும்னு தான் இருந்தேன் அதுவே தீபா கிட்ட போய் சேர்ந்துடுச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லிவிடுகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிறகு தீபா இது நெக்லஸ் அபிராமி அம்மா கையால எனக்கு கொடுக்கணும் என்று ஆசையை சொல்ல அபிராமி வேறு வழி இல்லாமல் அதை தீபாவுக்கு போட்டு விடுகிறாள். பிறகு பெட் ரூமுக்கு வந்த கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் நெக்லஸ் குறித்து பேச, அபிராமி அந்த வழியாக வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை காணத்தவறாதீர்கள்