தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கின் கம்பெனிக்கு வேலை தேடி வந்து கேட்ட கேள்விகளுக்கு அசால்ட்டாக பதிலளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
karthigai deepam serial
அதாவது, கார்த்திக் நேர்காணலில் பங்கேற்றவர்களில் தீபா திறமைசாலியாக இருப்பதால் அவளையே வேலைக்கு எடுக்கலாம் என முடிவு செய்கிறான், அதே சமயம் வெளியில் காத்திருக்கும் தீபா நமக்கு இந்த வேலை கிடைக்காது என முடிவு செய்து எழுந்து கிளம்பி விடுகிறாள். இங்கே கார்த்தி சினேகாவை அழைத்து அந்த பெண்ணையே வேலைக்கு எடுத்து விடலாம் வர சொல்லுங்க என்று சொல்ல இவள் தான் அழைத்து வந்த பெண் என நினைத்து சந்தோசப்பட கடைசியில் கார்த்திக் சொன்னது தீபாவை தான் என தெரிந்து ஷாக் ஆகிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
வேறு வழியில்லாமல் தீபாவை உள்ளே அழைத்து செல்ல, கார்த்திக் நீங்க இங்கேயே வேலை செய்யலாம், நீங்க எதிர்பார்க்குற சம்பளத்தை நாங்க தருகிறோம் என்று சொல்ல, தீபாவும் அதை ஏற்று கொள்கிறாள். பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது, தீபா இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல, கார்த்திக் வீட்டில் இதை பற்றி பேசி கொள்ள வேண்டாம் என தெரிவிக்கிறார்.
44
karthigai deepam today episode
அதே போல் ஆபிசில் நாம கணவன் மனைவி என்பதை காட்டி கொள்ளவும் வேண்டாம் என்று கார்த்திக் பதில் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.