தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. நேற்றைய எபிசோடில் கார்த்தியும் நர்ஸும் பரணியிடம் உண்மையை சொல்ல வருவதாக கூறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
zee tamil Anna serial
அதாவது கனி புது ட்ரெஸ்ஸை போட்டு பார்த்து கொண்டிருக்க, அதை பார்த்த ஷண்முகம் இது என்ன புது டிரஸ் என்று விசாரிக்க, பரணி மதினி தான் வாங்கி கொடுத்தாங்க, சென்னையில் இருந்து வந்துட்டாங்க என்று சொல்கிறாள். அதனை தொடர்ந்து கார்த்திக், ஷண்முகத்திற்கு போன் செய்து என்னுடைய வாழ்க்கையை சரி பண்ணி கொடுத்தது நீங்க தான், உங்களை பத்தி பரணி கிட்ட சொல்லி உங்க வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என்னுடைய கடமை. நாங்க நாளைக்கே ஊருக்கு வரோம் என்று போனை வைக்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
கையோடு பரணிக்கு போன் செய்து நாளைக்கு உன்னை பார்க்க ஊருக்கு வரேன் என்று சொன்னனதும், பரணி சென்னை வந்தும் உன்னை பார்க்க முடியலன்னு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு என தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள். மறுநாள் காலையில் ஊருக்கு வந்த இவர்கள் சண்முகத்தை சந்தித்து பேசி கொண்டிருக்கும் போது இதனை சனியன் கேட்டு விடுகிறான்.
44
Anna serial today episode
உடனே சனியன் இந்த விஷயத்தை சௌந்தரபாண்டியிடம் தெரியப்படுத்த அவர் இதைதடுத்தாக வேண்டும் என கிளம்பி வருகிறார். மறுபக்கம் பரணி கார்த்திக்கை சந்திக்க வருகிறாள். இவர்களின் சந்திப்பு நிகழுமா? சௌந்தரபாண்டி செய்யபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.