நாட்டாமை படத்தில் ரஜினிகாந்த் நடிச்சிருக்காரா? அடடே அதுவும் இந்த ரோலா?

First Published | Aug 20, 2024, 7:56 AM IST

நாட்டாமை படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nattamai

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் நாட்டாமை. இப்படம் கடந்த 1994-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் சரத்குமார் ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சிற்பி இசையமைத்து இருந்தார். பெரியளவில் எதிர்பார்ப்பின்றி ரிலீஸ் ஆன இப்படம், பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் சரத்குமாரின் மார்க்கெட்டும் எகிறியது.

Pedarayudu

நாட்டாமை படத்திற்கு முதலில் கே.எஸ்.ரவிக்குமார் தேர்வு செய்தது சரத்குமார் இல்லையாம். அவர் மலையாள நடிகர் மம்முட்டியை தான் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இருந்தாராம். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போக, பின்னர் பார்த்திபனை அணுகி இருக்கிறார். அவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால், இறுதியாக சரத்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறார் ரவிக்குமார். அவருக்கு கதை பிடித்துப்போக அதன் பின்னரே படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கோட் படத்தில் "கேப்டன்".. குடும்பத்தாரை சந்தித்து நன்றி சொன்ன தளபதி - வைரலாகும் புகைப்படங்கள்!

Tap to resize

rajinikanth in Nattamai Telugu Remake

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக கொண்டாடப்படும் நாட்டாமை படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் நிஜமும் கூட... அப்படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனவுடன், அதன் தெலுங்கு ரீமேக்கை ரஜினியின் நண்பரான மோகன்பாபு வாங்கி நடித்தார். பெத்தராயுடு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆன நாட்டாமை படத்தில் மோகன்பாபு சரத்குமார் கேரக்டரில் நடிக்க, அவரின் தந்தையாக, அதாவது விஜயகுமார் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

KS Ravikumar

நட்புக்காக ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த இப்படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் அதே ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த், தமிழில் முத்து என்கிற மாஸ் ஹிட் படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டானதும் ரஜினியை வைத்து படையப்பா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுமே ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... எழுந்ததும் ஆக்சிமீட்டரில் பல்ஸ் செக்.. அப்புறம் ஒர்க் அவுட் - 70திலும் கமலின் ஃபிட்னஸுக்கு காரணம் இது தான்!

Latest Videos

click me!