திடீரென பிரேமலதாவை சந்தித்து நன்றி சொன்ன விஜய்; காரணம் இதுதான்!!
Thalapathy Vijay : தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்த் இணைந்துள்ள நிலையில், அதற்காக அவரது குடும்பத்தாரை சந்தித்து நன்றி கூறியுள்ளார் விஜய்.
Thalapathy Vijay
விரைவில் தனது சினிமா பயணத்திற்கு "குட் பை" சொல்ல உள்ள தளபதியின் விஜய், விறுவிறுப்பாக தனது 68வது திரைப்பட பணிகளை கவனித்து வருகிறார். இடை இடையே தனது கட்சி பணியை அவர் கவனித்து வந்தாலும் கூட, ஒரு நடிகனாக தான் ஒப்புக்கொண்ட பணிகளை காலம் தவறாமல் செய்து முடித்து வருகிறார். சென்ற ஆண்டு, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை இரவு 11 மணிவரை சந்தித்து, அவர்களுக்கு பரிசுகளை அளித்த விஜய், அடுத்த நாள் காலை சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் சென்றது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு சின்ன வயது தங்கையா? வைரலாகும் கியூட் ஃபேமிலி கிளிக்ஸ்!
DMDK Leader Premalatha
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியிலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் அவை பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அது பல சாதனைகளை படைத்து வருகிறது.
The Greatest of All Time
இந்த கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி, கோட் படத்தின் இரண்டு முக்கியமான விஷயங்கள் என்றால், அது AI தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்ட பவதாரணியின் குரலும், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் காட்சிகளும் தான்.
Vijayakanth sons
ஏற்கனவே நடிகர் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் இந்த திரைப்படத்தில் இணைக்க அவரது குடும்பத்தாரிடம் அனுமதி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கு நன்றி கூறும் வகையில், இன்று சென்னையில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்தில், அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரனை சந்தித்து நன்றி கூறினார் தளபதி விஜய்.