எழுந்ததும் ஆக்சிமீட்டரில் பல்ஸ் செக்.. அப்புறம் ஒர்க் அவுட் - 70திலும் கமலின் ஃபிட்னஸுக்கு காரணம் இது தான்!
Kamalhaasan : தமிழ் திரையுலகை பொறுத்தவரை 5 முதல் ஆடிவந்தாலும், ஆக்சிஜன் குறையாமல் ஓடிவரும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.
Naayagan Kamal
"நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்" இந்த வரிகளுக்கு உண்மையிலேயே உகந்த ஒரு நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். தனது ஐந்தாவது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வரும் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு தான் தனது 65வது ஆண்டு கால திரை பயணத்தை தொடங்கினார். கணக்கில் அடங்கா கதாபாத்திரங்கள், எண்ணற்ற மொழிகள், நூற்றுக்கணக்கான விருதுகள் என்று அதே வேகத்துடன் பயணித்து வருகின்றார் அவர்.
தேசிய விருது கிடைத்ததும் நிறைவேறிய ஆசை.. டாப் தமிழ் நடிகரோடு இணையும் நித்யா மேனன்!
Kamalhaasan Fitness
திரைத்துறை கலைஞனாக மட்டுமல்லாமல், மக்கள் நீதி மையம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கி, ஒரு அரசியல் தலைவராகவும் கடந்த பல ஆண்டுகளாக உலகநாயகன் கமல்ஹாசன் பயணித்து வருவது அனைவரும் அறிந்ததே. சினிமா மற்றும் அரசியல் என்று அவருடைய கடினமான பணிகளுக்கு மத்தியிலும், சில வழக்கமான விஷயங்களை அவர் தினமும் மேற்கொள்கிறார். அதுவே 70 வயதிலும் அவருடைய இந்த பிட்னஸ்க்கு காரணம் என்றாலும் அது மிகையல்ல.
Ulaga Nayagan
காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்திருக்கும் கமல்ஹாசன், முதலில் ஆக்சிஜன் மீட்டரை எடுத்து தனது நாடித்துடிப்பை அறிந்துகொள்வாராம். பின் மெயினான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் முன் சில அடிப்படை Stretchesகளை செய்து முடிப்பாராம். பின் தனது ஜிம்மில் கொஞ்சம் நேரம் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் அவர் பிறகு ஒரு காபி குடித்துவிட்டு அன்றைய நாளின் செய்தித்தாள்களை படிப்பாராம். பிறகு தனது செல் போனில் இணைய வழியிலும் செய்திகளை படிப்பாராம்.
Ulaga Nayagan Kamal
தேவையான சத்துக்களை உடைய குறைந்த அளவிலா உணவுகளை மட்டுமே உண்டு, அன்றைய நாளுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளை துவங்குவாராம். அதுவே அரசியல் பிரச்சாரங்களுக்கு செல்லவேண்டிய நேரம் வரும்போது, அன்றைய தினம் தனது கால்கள் மற்றும் வயிற்று பகுதிக்கு அதிக அளவிலான ஒர்க் அவுட் செய்து அதை வலுப்படுத்திக்கொள்வாராம் Kamal Haasan. வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்லும்போது கூட தனது உணவு மற்றும் உடற்பயிற்சி கட்டுப்பாட்டை கமல் மீறுவதில்லையாம்.
அம்மாவின் நம்பிக்கை... ரசிகர்களின் ஆசை! த.வெ.க கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!