காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்; ஜோடி யார் தெரியுமா?

Published : Feb 09, 2025, 05:15 PM ISTUpdated : Feb 09, 2025, 07:37 PM IST

Kanchana 4 Shooting Started : ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு இப்போது பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

PREV
14
காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்; ஜோடி யார் தெரியுமா?
காஞ்சனா 4 பட்ஜெட் எத்தனை கோடி

Raghava Lawrence Started Kanchana 4 Shooting : தமிழ் சினிமாவின் டிரெண்டை மாற்றக் கூடியவர்களில் இயக்குநர் சுந்தர் சிக்கும், இயக்குநர் ராகவா லாரன்ஸூக்கும் அதிக பங்கு உண்டு. ஏனென்றால் இருவரும் மாறி மாறி பேய் கதைகளை எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார்கள். முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று வரிசையாக பேய் படங்களை எடுத்து ஹிட் கொடுத்துள்ளார். இதே போன்று தான் இயக்குநர் சுந்தர் சி யும் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 என்று வரிசையாக பேய் கதைகளை எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

24
காஞ்சனா 4 ஷூட்டிங் தொடங்கியது

சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்த நிலையில் அவருக்கு போட்டியாக ராகவா லாரன்ஸூம் காஞ்சனா 4 படத்தை தொடங்கிவிட்டார். பேய் மற்றும் த்ரில்லர் கதைகளுக்கு தமிழ் சினிமாவில் மவுசு ஜாஸ்தி என்பதால் இருவரும் அதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே காஞ்சனா 3 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் காஞ்சனா 4 படம் வரும் என்று கூறப்பட்டிருந்தது.

வசூலில் அஜித்தின் விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த சாய் பல்லவியின் தண்டேல்!
 

34
கஞ்சானா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

காஞ்சனா 3 படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கோவை சரளாவும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், ரூ.90 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் தான் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

44
ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே

சமீபகாலமாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் அவர் இப்போது காஞ்சனா 4 படத்தை கையிலெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்த ஆண்டில் அதிகாரம், பென்ஸ், கால பைரவா,புல்லட் ஆகிய படங்களிலும் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சிக்கு ஆப்பு வைக்க காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் 9 படங்கள் - முழு லிஸ்ட் இதோ
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories