பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன், முக தோற்றம் மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காட்சியளிப்பதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
10ம் வகுப்பு படிக்கும் போதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடிக்கத் தொடங்கினார் ஷிவானி. ஆரம்பத்தில் அந்த சீரியலில் நடிக்கும் போது கொழு கொழுவென குண்டு பேபியாக இருந்த ஷிவானி, பின்னர் உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மானார். இதனால் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த ஷிவானியை ஹீரோயினாக நடிக்க வைத்தனர். அந்த சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷிவானி. அந்த சீரியலில் நடிக்கும் போதே இன்ஸ்டாகிராமில் தினசரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஷிவானி.
25
பிக் பாஸ் புகழ் ஷிவானி
தினந்தோறும் மாலை 4 மணி ஆனால் ஷிவானியின் கவர்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாவில் இறங்கிவிடும். அதற்காகவே அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் ஏராளம். அந்த கவர்ச்சிக்கு பலனாக அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷிவானி, அந்நிகழ்ச்சியில் தன்னுடன் விளையாடிய சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை காதலித்தது பெரும் சர்ச்சை ஆனது.
பிக் பாஸ் முடிந்ததும் ஷிவானிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அவர் முதன்முதலில் நடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. அவருக்கு இப்படத்தில் டயலாக்கே கிடையாது. இருந்தாலும் அவர் வந்த காட்சிகளில் விசில் பறந்தன. பின்னர் விஜய் சேதுபதி உடன் டிஎஸ்பி என்கிற படத்தில் நடித்தார் ஷிவானி. இதில் அவருக்கு போலீஸ் வேடம். ஆனால் இப்படம் அட்டர் பிளாப் ஆனது.
45
ஷிவானிக்கு என்ன ஆச்சு?
பின்னர் வடிவேலுவின் நாய் சேகர் படத்திலும் நடித்தார் ஷிவானி. அப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து பம்பர் என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்திற்கு பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார் ஷிவானி. வழக்கமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டவில்லை.
55
பிளாஷ்டிக் சர்ஜரி செய்தாரா ஷிவானி?
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்ஸ்டா பக்கத்தில் ஷிவானி சில புகைப்படங்களை பதிவிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஷிவானியா இது என கேட்கும் அளவுக்கு உதடு பெரிதாகி, முகமெல்லாம் ஒடுங்கிப்போய் காட்சியளிக்கிறார். அவர் பிளாஷ்டிக் சர்ஜரி செய்ததால் தான் அவரது முகம் பொழிவிழந்து காணப்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் அவரின் முக மாற்றத்திற்கான உண்மை காரணத்தை ஷிவானி இதுவரை வெளியிடவில்லை.