தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த யூடியூபர்களில் விஜே சித்துவும் ஒருவர். முதலில் பிராங் ஷோ மூலம் பிரபலமான இவர், பின்னர் விஜே சித்து விலாக்ஸ் என்கிற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலுக்கு 40 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் டிராவல் விலாக்ஸ் மற்றும் உணவு வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம். இவரது வீடியோ வெளியானாலே ஒரே நாளில் அசால்டாக மில்லியன் கணக்கான பார்வைகளை தொட்டுவிடும்.
24
ஒரே வீடியோவால் பெயைக் கெடுத்துக் கொண்ட விஜே சித்து
அந்த ஒரு விஷயமே விஜே சித்துவுக்கு தற்போது தலைவலியாக மாறி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 7ந் தேதி விஜே சித்து மதியம் 3 மணியளவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவின் இறுதியில் தன்னுடைய டீம் உடன் கடைசியில் ஒரு கேம் ஒன்றை விளையாடி, அதில் தன்னுடன் விளையாடிய ஒருவர் தோற்ற பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு, அடித்து மிதித்து பதிவிட்டிருந்தார். காமெடிக்காக செய்வதாக நினைத்து சற்று எல்லைமீறி சென்றிருந்தார் விஜே சித்து. அவரின் இந்த செயலை பார்த்த நெட்டிசன்கள் கொதித்துப்போய் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
நெகடிவ் கமெண்ட் அதிகம் வந்ததும் அந்த வீடியோவை ட்ரிம் செய்துவிட்டாலும் அதை நெட்டிசன்கள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விஜே சித்துவை கடிந்துகொண்டிருக்கிறார்கள். அதிகம் கொண்டாடப்படும் யூடியூப்பராக இருந்து வந்த விஜே சித்துவுக்கு இவ்வளவு ஹேட்டர்ஸா என ஷாக் ஆகும் அளவுக்கு இந்த ஒற்றை வீடியோவை வைரலாக்கி அவரை சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
44
விஜே சித்துவுக்கு குவியும் கண்டனம்
என்ன தான் விளையாட்டாக இருந்தாலும் ஒருவரை இப்படியா கீழே தள்ளி மிதிப்பது. இவர் சேனல் தொடங்கியதில் இருந்தே இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார். தற்போதாவது அது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விஜே சித்துவுக்கு எதிராக பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளனர். சிலரோ அவரது இந்த செயலால் இனி அவர் சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்வதாக கூறி வருகின்றனர். இதனால் விஜே சித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.