இவர்களுடன் குஞ்சாக்கோ போபனும், பகத் பாசிலும் நடிக்கின்றனர். கடந்த வாரம் நடிகை ரேவதியும் படத்தில் இணைந்தார். ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரின் ஷிஹாப், பிரகாஷ் பெலவாடி போன்றோரும் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீலங்காவில் தான் மகேஷ் நாராயணன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இங்கு இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தன. யுஏஇ, அஜர்பைஜான் ஆகிய இடங்களில் தலா ஒரு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தன. கொச்சியில் படப்பிடிப்பு முடிந்ததும், 14 ஆம் தேதி முதல் டெல்லியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும். அத்துடன் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.