80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய ராதிகா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
24
ஏற்கனவே நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, வாணி ராணி, சித்தி 2 போன்ற சீரியல்கள் சக்கைப்போடு போட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க தயாராகி வருகிறாராம் ராதிகா. கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம்.
இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் ராதிகாவின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. ஆடை அணிகலன்களுடன் குட்டி இளவரசி போல் காட்சியளிக்கும் ராதிகாவை பார்க்கும்போது, ஒரு சாயலில் அவர் அச்சு அசல் சின்னத்திரை பிரபலம் சிவாங்கியைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இருவரையும் ஒப்பிட்டு பதிவிட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன.
44
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கினார். மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி, தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் குக் ஆக களமிறங்கி அசத்தி வருகிறார். இதுதவிர டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் நடித்து சினிமாவிலும் சிவாங்கி படிப்படியாக பிசியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.