அசத்தப் போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன சினிமா பிரபலங்கள் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த வகையில் தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமானார் ரோபோ சங்கர்.
இப்படி தந்தையும், மகளும் சினிமாவில் பிசியாக இருப்பதை போல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
அதற்கு காரணம் ரோபோ சங்கரின் தோற்றம் தான். நன்கு கட்டுமாஸ்தான் போல் இருந்த ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் படத்துக்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்பால் அவருக்கு இவ்வாறு உடல் எடை குறைந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் காட்சியளில்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... shruti Haasan : நீங்க வெர்ஜினா?... நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்